முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது
X

முதல்வர் ஸ்டாலின் 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் தொடர்புகொண்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்த உச்சம்பாறையை சேர்ந்த 30 வயதான இசக்கிமுத்து என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ஏற்கனவே இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது