பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் கொரோனா விழிப்புணர்வு

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்    கொரோனா விழிப்புணர்வு
X
சென்னை விமான நிலையத்தில் மும்பை செல்ல வந்த நடிகர் ரன்வீர் சிங் கொரோனா விழிப்புணர்வு செய்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார். அவரை பார்ப்பதற்கு ஏராளமானோர் திரண்டனர். அவரது இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கரில் 'எஞ்சாயி.. எஞ்சாமி' என்ற தமிழ் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த பாடலை அவர் ரசித்து கேட்டுக்கொண்டு, ரசனையுடன் தலையை ஆட்டி சென்றார். தமிழ் பாடலை கேட்டுச்சென்ற ரன்வீரை விமான நிலையத்தில் இருந்தவர்கள் வியப்புடன் பார்த்து சிரித்தனர்.

ரன்வீரிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களிடம்,' பேட்டி இருக்கட்டும். முதலில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கையை சுத்தம் செய்ய வேண்டும்.சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். அப்போதான் நாம் கொரோனாவை ஜெயிக்க முடியும். அரசாங்கம் சொன்னால் மட்டும் போதாது. நாமும் அதை முறையாக பின் பற்ற வேண்டும். அப்போதுதான் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும். அதனால், அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று வலியுறுத்திவிட்டுச் சென்றார்.



Tags

Next Story