பா.ஜ.க பொதுச்செயலர் கே.டி.ராகவன் மீதான பாலியல் காணொளி வெளியீடு : ராஜினாமா

பா.ஜ.க பொதுச்செயலர் கே.டி.ராகவன் மீதான  பாலியல் காணொளி வெளியீடு : ராஜினாமா
X

கே.டி.ராகவன்.

பா.ஜ.கவின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளியானதால், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கே.டி. ராகவன் மீது கூறப்படும் பாலியல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், அவர் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி. ராகவன் விலகியிருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

"தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு காணொளி வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த அந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

அதனால், இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் மாநில அளவிலான அரசியலில் பரவலாக அறியப்பட்டவர். இந்த நிலையில் இன்று காலை, மதன் டைரீஸ் என்ற யுடியூப் சேனலில், கே.டி. ராகவன் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி காணொளி ஒன்று வெளியானது. இந்த யுடியூப் பக்கத்தை நடத்தி வருபவர் கடந்த ஆண்டு அக்போடர் மாதம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தவர். கே.டி. ராகவன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை சுமத்தும் அவர் , இதுபோல மேலும் சில கட்சிப் பிரமுகர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதாகவும் , அவைகளையும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் வெளியிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

கே.டி. ராகவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு.

என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story