பூச்சிகள் அழிந்தால், மனித இனமும் அழியும்..! எப்படி..?

உலகெங்கும் உள்ள 75 பயிர் வகைகளின் மகரந்த சேர்க்கைக்கு பூச்சி இனம் இன்றியமையாதது. மண்ணை வளமாக்க, பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் உயிரிகளை கட்டுப்படுத்த, பூச்சி இனங்கள் தேவை.

Beneficial Insects,Extinction of Insects,World Pest Day 2024 in Tamil,Pest Control, Mosquito Control,Fly Killer,Rodent Control,Rat Control,Pest Management

உலகெங்கும் உள்ள பூச்சி இனங்கள் மனித செயல்பாடுகளால் மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது என்று கூறும் ஆய்வால் நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. உலகில் உள்ள பூச்சி இனங்களில் 40 விழுக்காடு அளவில் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து வருவதாகவும், நாம் தினமும் பார்த்துவந்த தேனீக்கள், எறும்புகள், மற்றும் வண்டுகள் போன்ற பூச்சி இனங்கள் பாலூட்டிகளைவிட 8 மடங்கு வேகத்தில் அழிந்து வருவதாகவும் கூறுகிறது, இந்த ஆய்வு.

ஆனால் இதற்கு எதிராக ஈ, மற்றும், கரப்பான் போன்ற பூச்சிகள் பெருகி வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த நம்மை செய்யும் பூச்சிகளின் பூச்சிகளின் அழிவுக்கு, விவசாயமும் ஒரு காரணம் என்று கூறும் இந்த ஆய்வின் முடிவு நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் கூட அது உண்மையும் கூட. மேலும் இது அதிர்ச்சியான தகவலும் கூட.

Beneficial Insects


இரசாயன பயன்பாடு

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கிறிஸ்டோபர் பிரான்சிஸ்கோ அவர்கள், "வேதியியல் மருந்துகளுடன் கூடிய தீவிரமான விவசாயம், நகர மயமாக்கல், காடுகள் அழிக்கப்படுதல், ஆகியவற்றால், பூச்சிகளின் வாழ்விடங்கள் அழிந்துவிட்டன. இவைதான், பூச்சிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்" என்கிறார்.

இரண்டாவது காரணம், "பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்தும்போது, தீமை செய்யும் பூச்சிகளுடன் இணைந்து, அதிகளவில் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து போகின்றன." என கவலை தெரிவிக்கிறார், அவர்.

மனித இனம் உள்ளிட்ட பிற உயிரிகளின் வாழ்வுக்கு பூச்சிகள் இருப்பது மிக முக்கியம். உணவு சங்கிலியிலும், மகரந்த சேர்க்கையிலும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகள், வௌவால், மற்றும் சில பாலூட்டிகளுக்கு, பூச்சிகள்தான் உணவு. உலகம் முழுவதும் உள்ள 75 வகையான பயிர்களின் மகரந்த சேர்க்கைக்கு, நன்மை செய்யும் பூச்சி இனம் இன்றியமையாதது. மண்ணை வளமாக்கவும் , பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் உயிரிகளை கட்டுப்படுத்தவும் இந்த நன்மை செய்யும் பூச்சி இனங்கள் தேவை என்பதை நாம் அறிவது அவசியம்.

Beneficial Insects

அதற்கு இயற்கை விவசாயமும், இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வும் மட்டுமே நம்மை வாழ வைக்கும். இதைத்தான் நம்மாழ்வாரும் கூறினார்


நம்மாழ்வாரின் விவசாய பூச்சி மேலாண்மை

பல்லாயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரியமிக்கது நம் விவசாயம் என்று நம்மாழ்வார் பெருமையாக கூறியுள்ளார். பதினொராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்ட பாரம்பரியம் கொண்டது நமது வேளாண்மை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படி பாரம்பர்யம் மிக்க விவசாயத்தின் உறவுகளான நாம் இன்று இரசாயன உரங்களை மண்ணில் அள்ளிக்கொட்டி மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த அவளை நிலையை எடுத்துக்கூறிய நம்மாழ்வார் அதில் இருந்து நம்மை மீட்டெடுக்க வந்தவர். விவசாயத்தை நிலைக்கச்செய்ய பாடுபட்டவர்.

அவரது உண்மையான பெயரே நம்மாழ்வார் தான். இப்படி இயற்கை விவசாயத்துக்கு அறைகூவல் விடுக்கும் அவர் நவீன விவசாய தொழில்நுட்பத்திற்கு எதிரானவரும் அல்ல. மாறாக மரபணு மாற்றபட்ட பயிர்கள் கேடு விளைவிப்பவை என்பதை நிரூபித்து அதை எதிர்த்தவர். பாரம்பரிய ஒட்டு ரக பயிர்களின் மூலமாகவே நாம் நல்ல விளைச்சலை பெற முடியும் என்று ஆணித்தரமாக செய்துகாட்டியவர். பல விவசாயிகள் இன்றும் அவரைப்பின்பற்றி இயற்கை விவசாயத்தில் ஆர்வம் ullavarkalaaka இருப்பதுடன் இயற்கை விவசாயத்தை பின்பற்றியும் வருகின்றனர். .

ஆப்பிரிக்க நாட்டின் மடகாஸ்கர் நெல் நடவுமுறை உலக அளவில் பிரபலமானது. அதை ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒற்றை நாற்று நெல் நடவு பற்றிய பயன்கள் மற்றும் விளைச்சல் பற்றி 1960-ம் ஆண்டுகளில் பல நாடுகளுக்கும் தெரிய வந்தது. இந்த முறையில் நாற்று நடும்போது விதை, நீர், நேரம் போன்றவை குறைவதுடன் மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுக்கிறது இந்த ஒற்றை நாற்றுநடவை. ஆனால் இந்த ஒற்றை நாற்று நெல் நடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது நமது முன்னோர்களான நம் தமிழர்கள்தான் என்ற உண்மையை தக்க ஆதாரங்களுடன் உலகிற்கு எடுத்துக் கூறி நிரூபித்தவர் நம்மாழ்வார்.

Beneficial Insects

பல்லாயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரியம் மிக்க நம் விவசாயம், பதினொராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்ட பாரம்பரியம் கொண்டது நம் வேளாண்மை என்பதே இந்த ஆய்வின் முடிவு. அப்படியான பாரம்பர்ய விவசாய முறையை பின்பற்றிய நாம் இரசாயன உரத்தை கொட்டி மண்ணை மலடாக்கிவிட்டோம். அப்படி நமது விவசாயத்தின் உயிர் நாடியாக, தாயாக விளங்கும் மண்ணை மலடாக்கும் நிலையில் இருந்து நம்மை மீட்டெடுத்து மண்ணைக்காத்தவர் நம்மாழ்வார்.

பாரம்பரிய வேளாண் நுட்பங்கள்

மண்ணின் நைட்ரசன் சத்து குறைபாட்டால் யூரியாவை மூடை மூடையாக கொட்டுவதற்கு மாறாக பயிர் சுழற்சி முறையின் மூலம் இயற்கையாக மண்ணில் நைட்ரசன் சத்தை மீட்டெடுக்கலாம் என்பதே அய்யாவின் முதல் வேளாண் நுட்பம்.

இரசாயன உரத்தால் மண்ணின் காரத்தன்மை அதிகரித்து அதிக அளவு நீரை உறிஞ்சுகிறது என்பதை ஆய்வு மூலம் காட்டியாவர். ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் டன் விஷத்தை மண்ணில் பரப்புகின்றோம் என்பதே நம்மாழ்வாரின் ஆதங்கம்

Beneficial Insects

பூச்சிக்கொல்லி

ஊறுகாய் கெட்டு போகவில்லை, கருவாடு கெட்டுப்போகவில்லை ஏன்? ஏன் ? ஏனென்றால் ஊறுகாயையும் மீனையும் மக்கச் செய்கின்ற நுண்ணுயிரிகளை நாம் உப்பிட்டு கொன்றுவிடுகின்றோம், அதே நிலைமை தான் மண்புழுவிற்கும், மண் நுண்ணுயிரிகளுக்கும். யூரியா, பொட்டாஸ் என்று கண்ட கண்ட உப்புகளை மண்ணில் இட்டு மண்புழுவையும், நுண்ணுயிரிகளையும் கொன்றுவிட்டு இருக்கின்றோம்.

ஒரு செடியில் பத்து பூச்சி, செடிகளைத் தின்கிறது என்றால் அந்த பத்து பூச்சிகளையும் உண்பதற்கு பத்தொன்பது பூச்சிகள் தேடி வரும். அந்த பத்தொன்பது பூச்சிகளையும் உணவாக்கிக்கொள்ள 200 வகை பறவையினங்கள் உள்ளன. இதில் பூச்சிக் கொல்லிகளை தெளித்து நல்ல பயன் தரும் பூச்சிகளையும் சாவடித்துவிடுகிறோம். இப்பூச்சிகள் இல்லாமையால் பறவைகளும் வருவதில்லை என்பதே நம்மாழ்வாரின் ஆதங்கம் அதற்கு அவர் தரும் தீர்வு இயற்கை பூச்சி விரட்டி.

ஆடு, மாடு கடிக்காத இலை செடிகளை நன்றாக நறுக்கி மாட்டு சிறுநீரில் ஏழு நாட்கள் ஊற வைத்தால் யாருக்கும் நீங்கு இல்லாப் பூச்சி விரட்டியை தயார் செய்யலாம் என்பே நம்மாழ்வார் காட்டும் வழி.

Beneficial Insects

யூரியா

தாவரங்களுக்கு தேவை வெறும் 6 -7 சதவீத நைட்ரசன் (யூரியா) இதற்கு எதற்குப்பா மூட்டை மூட்டையா யூரியா வாங்கனும்?

யூரியாவில் 45 சதவீதம் நைட்ரசன் இருக்கிறதாம். ஆனால் காற்றிலும் வளிமண்டலத்திலும் 75சதவீத நைட்ரசன் இருக்கிறது. இது தான் உண்மை. நைட்ரசனை நிலைப்படுத்தும் தானிய பயிர் வகைகளை பயிரிட்டு மண்ணின் கற்பை காக்கலாம் என்பதே நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்.

மண்

மண்ணின் தன்மை மூன்று வகை

1) பௌதிகத் தன்மை

மண்ணின் பௌதிக தன்மை கெடாமல் பார்த்து கொள்ளல் வேண்டும்

ஆடு, மாடுகளின் கழிவுகளை நிலத்தில் போட்டால், ஆற்று வண்டல், குளத்து வண்டல் போன்றவற்றை இடுவதன் மூலம் மண்ணின் பௌதிக தன்மை மாறாமல் இருக்கும்

Beneficial Insects

2) உயிரியல் தன்மை

மண்ணின் இயற்பியல் தன்மை மாறாமல் இருந்தால், இயற்கையாகவே அந்த மண்ணில் மண்புழு, மற்றும் நுண்ணுயிரிகள் வளர்ந்துவிடும். இதுவே உயிரியல் தன்மை எனப்படுகிறது.

3) இரசாயனத் தன்மை

பௌதிக தன்மையும், உயிரியல் தன்மையும் இருந்தால் அந்த மண்ணில் , தாவரங்களுக்குத் தேவையான மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு என்று எல்லலா இரசாயனத் தன்மைகளும் காணப்படும்

ஆனால் நேரடியாக இரசாயன உரங்களை இடுவதால் மண்ணின் பௌதிகத் தன்மையும், உயிரியல் தன்மையும் , உயிரியல் தன்மையும் அறுந்துவிடுகிறது. மனித வாழ்வியல் சங்கிலியின் பிணைப்பில் இரண்டு சங்கிலைப்பிணைப்பை நாமே அறுத்துவிடுகின்றோம்.

20 வகையான விதைகளை விதைத்து 5 மாதம் வளரவிட்டு மடக்கி உழுவதன் மூலம் மலடாக்கி மண்ணை மீட்டெடுக்கலாம் என்கிறார் நம்மாழ்வார்.

Beneficial Insects

நன்மை செய்யும் பூச்சிகள்

  1. சிலந்தி
  2. கும்பிடு பூச்சி அல்லது இடையன் பூச்சி
  3. நீல வால் பெண் பூச்சி
  4. பருத்திக்கறை பூச்சி
  5. சில்வண்டு
  6. ஊசிவால் குளவி
  7. தரை வண்டு
  8. பச்சை கண்ணாடி ஜரிகை பூச்சி
  9. ஹெலிகாப்டர் பூச்சி
  10. கரும்புள்ளி செவ்வண்டு

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!