வெயில் காலம் வந்தாச்சு. உஷார்! பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும்
காட்சி படம்
தற்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால், வெம்மையில் இருந்து தப்பிக்க பாம்புகள் குளிர்ச்சியாக உள்ள இடங்களை தேடும். வெயில் காலம் வந்துவிட்டாலே பூச்சிகள், பாம்புகள் போன்றவை குளிர்ச்சியான இடம் தேடி வீடுகளில் நுழைகின்றனவாம். அதிலும் குறிப்பாக வீடுகளில் மரம் செடி உள்ள இடங்களிலும் , கழிவு நீர் செல்லும் இடங்களிலும் அவை தஞ்சமடையும்.
எனவே ,வீட்டில் இருப்பவர்கள் மிக ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.
- நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தையும் ஏறிவிடும். .
- மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
- குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
- படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
- வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
- பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
- உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
- பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டது உங்களுக்கு பயமாக இருந்தால் அருகிலுள்ள வனத்துறையினரை கூப்பிடுங்கள்
உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.
மேற்சொன்ன விவரங்களை படித்து தெரிந்து கொண்டு உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இவை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu