தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதா? பிளக்ஸ், பேனர்கள் அச்சிட தடை?

தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதா?  பிளக்ஸ், பேனர்கள் அச்சிட தடை?
X

தேர்தல் ஆணையம் (கோப்பு படம்)

தமிழகத்தில் பிளக்ஸ்கள், பேனர்கள் அச்சிடக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாளில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி விடும். அத்தனை அரசுத்துறைகளும் தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகின்றன. இப்போதே போலீஸ் நிர்வாகம் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வியூகங்களை வகுத்துள்ளன. இதில் ஒன்றாக பிளக்ஸ்கள், பேனர்கள் அச்சிடக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் நிர்வாகங்களின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிளக்ஸ், பேனர்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்களின் சங்கத்தை அழைத்து பேசி உள்ளனர். இந்த பேச்சின் போது, அரசியல் கட்சிகளுக்கு, ஜாதி அமைப்புகளுக்கு, பொது விழாக்கள் தொடர்பாகவும், தனி விழாக்கள் தொடர்பாகவும் பிளக்ஸ்கள், பேனர்கள் அச்சிடக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

நோட்டீஸ்களை அச்சிடும் முன்பு போலீசிடம் காட்டி அனுமதி பெற வேண்டும். விதிகளை மீறிய வாசகங்கள் நோட்டீசில் இடம் பெற்று இருந்தால், அந்த அச்சகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனை அனைத்து அச்சக உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் கிட்டத்தட்ட லோக்சபா தேர்தல் நடைமுறைகள் மறைமுகமாக தொடங்கி விட்டன. நேரடியாக இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வந்ததும், முழுமையாக நடைமுறைக்கு வந்து விடும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!