அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: உத்வேகத்துடன் வீரர்கள் பங்கேற்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜல்லிகட்டு போட்டியை, அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில், ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றனர் மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் இருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே, களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்ட காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிசீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டிருந்தன. போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. .
ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்போட்டியானது, காலை 7மணிக்கு தொடங்கி மாலை 3மணிவரை நடைபெற்றத். சிறந்த காளைக்கு கார் ,முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக் சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பிலும் பரிசு வழங்கப்படுகிறது.
தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், இதில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி ஆர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu