ATM கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்கணும்..? வாங்க பார்ப்போம்..!

atm card apply letter-ஏடிஎம் கார்டு - மாதிரி படம்
atm card apply letter-புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கு எப்படி கடிதம் எழுத வேண்டும் என்பதற்கு வழிமுறைகளோடு மாதிரி கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பாருங்க..மாதிரி விண்ணப்பத்தை போல கோரிக்கை விண்ணப்பம் எழுதி ATM கார்டை வாங்குங்க.
ஏடிஎம் கார்டு பெறுவதற்கான மாதிரி கடிதம் எழுதுவதற்கான சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. அதைப்பின்பற்றி கடிதம் எழுதலாம்.
அனுப்புனர் முகவரியில்
பெறுநர் முகவரி
பொருள்
விழித்தல்
கடிதத்தின் விபரம்
முடிவு
நன்றி
தேதி, இடம் - இந்த வரிசைப்படி கடிதம் அமைந்திருத்தல் வேண்டும். இப்போ மாதிரி கடிதத்தை பார்த்தால் இலகுவாக புரியும்.
மாதிரி கடிதம்
அனுப்புனர்
கௌ. நுவழினி,
எண் : 14, மார்க்கண்டேய வீதி,
கோனேரிப்பட்டி,
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம்
கிளை மேலாளர்,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம்.
பொருள் : புதிய ATM கார்டு பெறுவது சார்பு.
நான் நமது வங்கிக் கிளையின் வாடிக்கையாளர். எனது கணக்கு எண் : SB -001223456ஆகும். எனது கணக்கு எண்ணிற்கு இன்னும் நான் ATM கார்டு பெறவில்லை. ஆகவே, எனது கணக்கு எண்ணிற்கு புதிய ATM வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இவண்,
உண்மையுள்ள,
கௌ.நுவலினி
தொடர்பு எண்: 9999999999
இணைப்பு:
ஆதார் அட்டையின் நகல்
வங்கி பாஸ்புக்கின் நகல்
பான் கார்ட் நகல்
புகைப்படம்
பூர்த்தி செய்யப்பட்ட புதிய ATM கார்டு விண்ணப்பம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu