/* */

இசை மூலம் சோகத்தை வெளிப்படுத்திய கலைஞர்கள்..!

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசை குழுவினர் சோக பாடல்கள் மூலம் அவர்களின் வேதனையை அரசுக்கு வெளிப்படுத்தினர்.

HIGHLIGHTS

இசை மூலம் சோகத்தை வெளிப்படுத்திய கலைஞர்கள்..!
X

குன்னூரில் உள்ள அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இசை குழுவினர் சோக பாடல்கள் வாசித்து தங்களின் பாதிப்பை அரசுக்கு வெளிகாட்டினர்.

நீலகிரி மாவட்டத்தில் 750 க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் மற்றும் பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட கிராமிய இசைக் கலைஞர்கள் உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் எந்தவித திருவிழாக்களும், சுபநிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தற்போது 2 மாத காலமாக சிறுசிறு நிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றால் 10ம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்களும், சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருப்பதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், ஆண்டின் முதல் 4 மாதங்கள் வரும் வருமானத்தை வைத்துதான் பிள்ளைகளின் படிப்பு கட்டணம், குடும்ப செலவு போன்றவற்றை கவனித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் 2020ம் ஆண்டு பள்ளி படிப்பு, குடும்ப செலவுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும், பேண்ட் வாத்திய தொழிலை நம்பி தமிழ்நாட்டில் ஏராளமான இசை கலைஞர்களின் குடும்பத்தினர் வாழ்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 22 April 2021 2:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்