அரியலூர்- கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக, மூன்று இளைஞர்கள் குளித்துவிட்டு ஆற்றைக் கடந்த போது, துறையூரைச் சேர்ந்த கௌதம் என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில், துறையூரை சேர்ந்த இளைஞர் கெளதம் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர் வேலை பார்த்து வந்த நிலையில். ஞாயிறு வேலை முடித்து நண்பர்களுடன், மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்ற நிலையில் நீச்சல் தெரியாத காரணத்தினால், நண்பர்கள் கண் முன்னே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தா.பழூர் காவல்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் காணாமல்போன கௌதமை, ரப்பர் படகு மூலம், பாதுகாப்பு உடை அணிந்து கரை ஓரங்களிலும் தீவிரமாக இரண்டாவதாக நாளாக தேடி வந்தனர்.
மூன்றாவது நாளான இன்று காலை, அவரது உடல் வாழைகுறிச்சி கிராமம் அருகே மிதந்ததைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu