ஜெயங்கொண்டம் பகுதியில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை: பெண் கைது

ஜெயங்கொண்டம் பகுதியில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை: பெண் கைது
X

கைது செய்யப்பட்ட விஜயா.

ஜெயங்கொண்டம் பகுதியில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து, 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்திரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பின்புறம் தோப்பேரித்தெருவில் மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அங்கு பெண் ஒருவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் ஜெயங்கொண்டம் தோப்பேரித்தெருதெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி விஜயா வயது (50) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்