சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வார்டன் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வார்டன் போக்சோ சட்டத்தில் கைது
X

மோகன்ராஜ்

திருமானூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வார்டன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காமரசவல்லி சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மோகன்ராஜ் (20). இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் ஹோம் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மோகன்ராஜ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மோகன்ராஜின் தந்தை முருகேசன், சிறுமியை நீ என்ன பெரிய உலக அழகியா என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி.சிறுமி மற்றும் மோகன்ராஜ்யிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என உறுதியானதை அடுத்து மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மோகன்ராஜின் தந்தை முருகேசன் மீது வழக்கு பதிந்து தேடி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture