சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

அரியலூர் - மணகெதி பகுதி சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பணி முடிவடைந்துள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் மணகெதி பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றி பெரும்பாலான கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மினிலாரி மினிவேன் மூலமாக விவசாய இடுபொருட்களை கொண்டு வருவதற்கும், விவசாய விளை பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாய பயன்பாட்டிற்கான வாகனங்கள் ஒரு நாளைக்கு பலமுறை சுங்கச்சாவடி கடக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் சுங்கச்சாவடியை கடக்கும்போது ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடி கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி, அப்பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சுங்க வரி வசூலிப்பதை கண்டித்தும், சுங்கச்சாவடிபை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india