வடிகால் வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

வடிகால் வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
X

துளாரங்குறிச்சி  மழை  நீர் வடிகால் வசதி செய்து தரக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மழைநீர் வடிகால் வசதி அமைக்காமல் சாலை அமைப்பதை கண்டித்து கிராமமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்காமல் சாலை அமைப்பதை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் அரியலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!