மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
X

காசாங்கோட்டை கிராமத்தில் கோயிலை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.


அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரமங்கலம் அடுத்த காசாங்கோட்டையில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலின் முகப்பு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், கோயிலை சீரமைக்க அனுமதி அளித்தால் கூட போதும், அதற்கு உரிய செலவை கிராம மக்களே ஏற்போம் எனவும், கோயிலை சீரமைக்க நடவடிக்கை வேண்டியும் கிராம மக்கள் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபடுவதால் பாதிக்கப்படுவது நம் மக்கள் எனக்கூறி தாமாகவே சாலை மறியலை கைவிட்டு, கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!