அரியலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பா. ம.க.வினர் விருப்ப மனு தாக்கல்

அரியலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பா. ம.க.வினர் விருப்ப மனு தாக்கல்
X

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள பா.ம.க.வினரிடம் விருப்ப மனு  பெறப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு பா.ம.க. சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

ஜெயங்கொண்டம் பா.ம.க. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட பா.ம.க.செயலாளர் ரவி, மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, கட்சி மாநில துணைத் தலைவர்கள் ராமதாஸ், கோவிந்தராஜ், நகர செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!