சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
குண்டர் சட்டத்தில்  கைதான மூவர்.
ஜெயங்கொண்டம் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்புசட்டம் பாய்ந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் உட்பட 9 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த மார்ச் 14-ஆம் தேதி கைது செய்தனர் தலைமறைவாக இருந்த 3 பேரை தேடி விசாரித்து வந்தனர். பின்னர் மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சாந்தா (30) என்பவர் வீட்டு வேலைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார்.

தொடர்ந்து, அந்த சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பலர் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்நிலையில் உடந்தையாகவும், பலாத்காரம் செய்த லாட்ஜ் உரிமையாளர் செந்துறை அருகே உள்ள சித்துடையார் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் கந்தசாமி (45 )என்பவரையும் சட்டத்தில் சில நாட்களுக்கு முன்பே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய உரிமையாளருக்கு உடந்தையாக இருந்த லாட்ஜின் மேலாளர் மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் தனவேல் (58) என்பவரையும், நாகமங்கலம் கருப்புசாமி மகன் பாலச்சந்திரன் (23) மற்றும் தஞ்சாவூர் கீழவாசல் பாம்பாட்டி தெரு முருகேசன் மகன் வினோத் (29) ஆகிய 3 பேர் மீதும் பாலியல் குற்ற வழக்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான ஆணை நகலை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி திருச்சி மத்திய சிறைக்கு சென்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனவேல், பாலச்சந்தர், வினோத் ஆகிய மூன்று பேரிடமும் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!