கோவில்களில் திருட்டு, தொடர் கொள்ளை பொதுமக்கள் அச்சம் ..!

கோவில்களில் திருட்டு, தொடர் கொள்ளை பொதுமக்கள் அச்சம் ..!
X
அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சம்போடை என்ற கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புகுந்த மர்ம நபர்களால் சாமி சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோயிலுக்கு வழக்கம்போல் வந்த கோயில் பணியாளர்கள் கோயில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் 3 சவரன் தாலி மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது கிராமத்தில் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு கோவில்களில் கொள்ளை போன சம்பவம் குறித்து கிராம மக்கள் புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture