போராட்டம் நடத்திய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்: சமாதானப்படுத்திய போலீசார்

போராட்டம் நடத்திய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்: சமாதானப்படுத்திய போலீசார்
X

உடையாபாளையம் அருகே, பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.


தத்தனூர் குடிக்காடு பள்ளிக்கு, அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே, தத்தனூர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கழிவறை வசதி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டியும், பள்ளி அருகில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதை தடுக்க வலியுறுத்தியும், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இன்று பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த உடையார்பாளையம் போலீஸார், ஜெயங்கொண்டம் வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு தேவையான வசதிகள் கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். இதனால், சற்று பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்