அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் ஆறாக மாறிய தெரு மற்றும் பொது இடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் ஆறாக மாறிய தெரு மற்றும் பொது இடங்கள்
X

அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராம தெருவில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.

அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் தெரு மற்றும் பொது இடங்கள் ஆறு போல் மாறி உள்ளதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம், கோட்டியால் கிராமங்களில் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் வீதிகளையும், பொது இடங்களையும் ஆறுகளாக மாற்றிச் செல்லும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

நேற்று இரவு அரியலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சிங்கராயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வயல் வெளியில் இருந்து மழை நீர் வடிய வடிகால் வசதி இல்லாததால் கிராமங்களில் உள்ள வீதிகளில் புகுந்து பொது இடங்களை சூழ்ந்து சாலைகளில் சென்றதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது‌.

மேலும் இந்த மழை நீரானது சிங்கராயபுரத்தில் இருந்து வயல்வெளிகள் வழியாக மீண்டும் கோட்டியால் கிராமத்தில் புகுந்து சாலைகளை ஆக்கிரமித்து சென்று வருகிறது. இதனால் கிராமங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.


வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வீதியில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மழைநீர் கிராமங்களை சூழ்ந்து செல்லாமல் ஓடை வழியாக மழைநீர் செல்ல வடிகால்களை சரிசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இனி வரும் காலங்களில் மழைநீர் ஊருக்குள் புகாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்