சுத்தமல்லி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

சுத்தமல்லி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.

சுத்தமல்லி கிராமத்தில் பேருந்து சரியாக இயங்காததை கண்டித்து சுமார் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் பேருந்து வராததால் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், காலை பள்ளிக்கு வருவதற்கு சரியான முறையில் பேருந்துகள் வருவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்வது தாமதம் ஆகிறது. ஆகையால் பொது தேர்விற்கு கூடுதலாக நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

அதே போல் மாலையில் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து இல்லை. பள்ளி விடுவதற்கு முன்பாகவே பேருந்துகள் சென்று விடுகின்றன. எனவே வீட்டிற்கு செல்வதற்கு இரவு 8 மணி ஆகிறது என தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் சுத்தமல்லி வழியாக கும்பகோணம்- அரியலூர் சாலையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்