ஆண்டிமடம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ஆண்டிமடம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சிலம்பூர்-ஆண்டிமடம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது அழகாபுரம் ரோட்டுத்தெரு. இப்பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிக்கு கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக குடிநீர் சில நாட்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. அதன் பிறகு மோட்டார் பழுதடைந்தது. மோட்டார் பழுது நீக்க எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை திரும்ப அப்பகுதிக்கு மோட்டார் பொருத்தப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகவும் அவதிக்குள்ளாகி பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பலமுறை இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திடீரென பொதுமக்கள் காலி குடங்களுடன் சிலம்பூர்-ஆண்டிமடம் மெயின் ரோட்டில் அழகாபுரம் ரோட்டு தெரு குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதவாறு கயிறு கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி செல்லும் பள்ளி வாகனங்கள் நீண்ட நேரம் நின்றதால் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Tags

Next Story
ai solutions for small business