சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்

சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்
X

கூட்டத்தை கலைக்க தடியடி நடத்திய போலீசார்.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீதுபோலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். அவரும், அவரது மகன் பாலமுருகன் ஆகியோரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மூர்த்தியான் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அரியலூரை நோக்கிச் சென்ற கார் மோதியதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் பாலமுருகன் படுகாயம் அடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த செந்தில்குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்திற்கு காரணமான காரை பறிமுதல் செய்து அதனை ஓட்டிய டிரைவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றுக்கூறி பிரேத பரிசோதனை முடிந்த உடலை வாங்காமல் ஜெயங்கொண்டம் மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஜெயங்கொண்டம், தா.பழூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அதிகம் தேங்கிநின்றன. போலிசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்து கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில் போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself