கிராமத்திற்குள் புகுந்த 2 மான்கள் மீட்பு

கிராமத்திற்குள் புகுந்த 2 மான்கள் மீட்பு
X
குடியிருப்பு பகுதிக்குள் தவறி வந்த 2 புள்ளி மான்களை இளைஞர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் அருகே காட்டுப்பகுதி உள்ளது. இங்கு புள்ளிமான்கள், மயில்கள் உள்ளிட்டவை அதிக அளவில் வசித்து வருகின்றன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீரை தேடி வேணாநல்லூர் கிராமத்திற்குள் 3 மாத பெண் மான் குட்டி ஒன்று நுழைந்துள்ளது. அப்போது மனைப்பகுதியில் கம்பிவேலியில் நுழைந்தபோது அதில் சிக்கி தவித்து வந்தது. இதனை கண்ட இளைஞர்கள் உடனடியாக மீட்டனர்.

அதேபோல இரண்டு வயதுடைய பெண் மான் ஒன்று மைக்கேல்பட்டி கிராமத்தின் சாலையில் சென்று வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த கம்பியில் சிக்கிய நிலையில் கிடந்தது. இதனையும் அப்பகுதி இளைஞர்கள் மீட்டனர். இவர்கள் அளித்த தகவலின்படி வனத்துறை அதிகாரி சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், மாற்றம் தா.பழூர் காவல்துறையினர் விரைந்து வந்து இரண்டு மான்களையும் மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.


Tags

Next Story
ai marketing future