ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு

ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
X

ஜெயங்கொண்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.


ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19- ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 38 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தேர்தல் வாக்குப் பதிவின்போது கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்களுக்கு இடமின்றி அமைதியான முறையில் நடத்த தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு, தேர்தல் வாக்குப்பதிவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் டி.எஸ்.பி. விஜயகுமார், திருமேனி மற்றும் டி.எஸ்.பி. கலை கதிரவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளாகத்தில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, அண்ணாசாலை 4ரோடு, பஸ் நிலையம் வழியாக செந்துறை சாலை பகுதியில் முடிவடைந்தது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil