/* */

பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பிளஸ் 2 மாணவன் கைது

பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பிளஸ் 2 மாணவன் கைது
X
கொலை செய்யப்பட்ட மாணவர் மணிகண்டன்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு முருகன், மணிகண்டன் (வயது 16) என 2 மகன்கள் உண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லலிதா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து மதியழகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அருகில் உள்ள வானதிராயன்பட்டினம் கிராமத்தில் வசித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் மணிகண்டன் தனது தாய்வழி தாத்தா- பாட்டியான ராமசாமி, பாப்பாத்தி ஆகியோரின் பராமரிப்பில் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தார். அந்த கிராமத்தின் அருகில் உள்ள அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் உள்ள தனது பெரியம்மாள் பராமரிப்பில் முருகன் வசித்து வருகிறார். இவர் விவசாய பணிகளுக்கான டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

அரியலூரில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மணிகண்டன் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அவ்வப்போது மணிகண்டன் தனது தாத்தா, பாட்டியை பார்க்க பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து செல்வதும், அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் உள்ள பெரியம்மாள் வீட்டிற்கு சென்று தனது அண்ணன் முருகனுடன் தங்கி செல்வதும் வழக்கம். தற்போது பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மணிகண்டன் தேர்வு எழுதிவிட்டு தனது தாத்தா வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் உள்ள அண்ணனை பார்க்க சென்றுவிட்டு, மீண்டும் தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டின் முன்பக்க அறையில் படுத்து தூங்கினார். அவரது தாத்தா-பாட்டி இருவரும் அருகில் உள்ள மற்றொரு சிறிய வீட்டில் படுத்து தூங்கினர்.

அவர்கள் நேற்று காலை எழுந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகே பெரிய கருங்கல் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், மணிகண்டனின் உடலை கண்டு கதறி அழுதனர். மேலும் இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில் தலையில் கல்லைப்போட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது ெதரியவந்தது.

மணிகண்டன் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தில் யாருடனும் அதிகம் பழகுவதற்கான வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கொலை எப்படி நடந்தது என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கு அனைவரிடமும் இனிமையாக பழகும் தன்மை கொண்டவர் என்பது தெரியவந்ததால், கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து விசாரிக்க தா பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் கோபி, ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார் ரவிச்சந்திரன் குமார் வேல்முருகன் ராஜசேகர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல், குற்றப்பிரிவு போலீசார் மணிவண்ணன், மணிமொழி, பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய சிறப்பு போலீஸ் படை தீவிர விசாரணையில் ஈடுபட்டது.

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், செல்போன் சிக்னல்கள், கடந்த ஓரிரு நாட்களில் மணிகண்டன் தனது செல்போன் மூலமாக பேசிய நபர்கள், தொடர்பு கொண்ட எண்கள் உள்ளிட்டவற்றை கொண்டு தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.

மணிகண்டனுடன் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சில மாணவர்களை சந்தேகத்தின் பெயரில் தா பழூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து ரகசியமாக விசாரணை செய்தனர்.

அப்போது மணிகண்டனுடன் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சக மாணவர்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 படிக்கும் மாணவனை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அந்த மாணவனின் செல்போன் சிக்னலும் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சம்பவம் நடைபெற்ற அதே பகுதியில் இருந்தது போலீசாரின் சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

இதன் பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பிளஸ் டூ மாணவனிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை செய்த பிளஸ்டூ மாணவன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பொழுது பிளஸ் 2 மாணவன் பாலியல் ரீதியாக தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்துவிட்ட கொலை செய்யப்பட்ட மணிகண்டன் ஹாஸ்டலில் உள்ள சக நண்பர்களிடம் இதுகுறித்து கூறிவிட்டதாகவும் அதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டதால் இதுதொடர்பாக மணிகண்டனுக்கும் கொலை செய்த பிளஸ் டூ மாணவனுக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

தங்கிப் படிக்கும் ஹாஸ்டலில் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்த மணிகண்டனை எப்படியும் கொலை செய்துவிட வேண்டும் என்று பிளஸ் 2 மாணவன் தனிமையில் திட்டம் தீட்டியுள்ளார்.

இதன் பின்னர் கடந்த 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் மணிகண்டனின் சொந்த ஊரான பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு கொலை செய்த பிளஸ் டூ மாணவன் வந்துவிட்டார். பின்னர் பகல் நேரம் முழுவதும் அந்த பகுதியை நோட்டம் விட்டவாறு இருந்துள்ளார். கொலை செய்வதற்கு சரியான நேரம் வரும்வரை காத்திருப்பது என முடிவு செய்து அருகிலுள்ள தைல மர தோப்புகளில் மறைவாக இருந்துள்ளார். இரவு 11 மணி அளவில் மணிகண்டன் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு மணிகண்டனின் தாய்மாமா ரமேஷ் வீட்டின் வாசலில் படுத்து இருந்ததாகவும் யாரோ வரும் சத்தம் கேட்டு விழித்து கொண்டதாகவும் இதனால் அச்சமடைந்து மீண்டும் தைல மர தோப்பு ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் முழுவதும் ஊர் அடங்கியவுடன் 2:00 மணி அளவில் மணிகண்டன் வீட்டிற்கு வந்துள்ளார். அதற்குள் மணிகண்டனின் மாமா ரமேஷ் நன்றாக தூங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டனின் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கைது செய்யப்பட்ட பிளஸ்டூ மாணவன் தனது கொலை குற்றத்தை தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலை செய்த மாணவனின் செல்போன் சிக்னல் 22.5.2022 காலை 10 மணி முதல் 23ம் தேதி 3:30 வரை அதே பகுதியில் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். அதுபோல் கொலைக் குற்றத்தில் அவரோடு வேறு யாரும் இருந்ததற்கான எந்த செல்போன் சிக்னலும் பதிவு செய்யப்படவில்லை. கொலையை தான் மட்டுமே திட்டமிட்டு செய்ததாக போலீசில் கொலை செய்த மாணவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து கொலை செய்த மாணவன் ஊருக்குச் செல்லும் வழியில் இருந்த பல்வேறு கண்காணிப்பு கேமரா காட்சிகளை திரட்டி மாணவனின் நடமாட்டத்தை போலீசார் உறுதி செய்தனர்.

மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்ட கொலை செய்த மாணவன் சுமார் 17 மணி நேரம் யாருடைய துணையும் இல்லாமல் கொலைவெறியோடு சம்பவம் நடந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது போலீசாருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொலை செய்த பிளஸ் டூ மாணவனை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் போலீசார் மாணவனை திருச்சி சிறுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Updated On: 25 May 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்