பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி

பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி
X

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரியலூர் பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். அரங்கநாதன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பென்சனர் தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம் கூடாது என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகள் ஆறுமுகம், அண்ணாமலை, மாயவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக ரங்கநாதன் வரவேற்றார். துணைத் தலைவர் கோவிந்தராசு நன்றி கூறினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!