உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: எம்எல்ஏ கண்ணன் திறந்து வைப்பு

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: எம்எல்ஏ கண்ணன் திறந்து வைப்பு
X

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்புவிழாவில் கலந்துகொண்டு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கடையினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.


உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட, உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்புவிழாவில் கலந்துகொண்டு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கடையினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் த.அறப்பளி, தா.பழூர் சரக கூட்டுறவு சார் பதிவாளர் சசிகுமார், ஜெயங்கொண்டம் சரக கூட்டுறவு சார் பதிவாளர் ப.விவேக், ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலர் த.ஜானகிராமன், உதயநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாவீரப்பன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்