ஓடையில் உடைப்பு: தா.பழூர் அருகே 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது
ஸ்ரீபுரந்தான், அருள்மொழி, அணைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நீரில் மூழ்கிய நெல் நடவு செய்த வயல்கள்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், வடிகால் ஓடையில் 175 கன அடி நீரை திறந்து வைத்தார். ஓடையில் கரை பலப்படுத்த படாமல் இருந்ததால், அதனுடைய கரைகள் பல இடங்களில் உடைந்தது. இதனால் ஸ்ரீபுரந்தான், அருள்மொழி, அணைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட நெல் நடவு பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கின.
இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், தற்போது நெல் நடவு செய்யப்பட்ட வயல்களில் நெல் நாற்றுகள் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நீரில் மூழ்கி உள்ளன. மழை நீரில் இருந்து தண்ணீர் வடிவதற்கு ஒரு வார காலத்திற்கு மேல் ஆகும். மேலும் மழைநீர் ஆங்காங்கே அதிகமாக செல்வதாலும், பொன்னாற்றில் நீர் அதிகமாக வெளியேறாத காரணத்தினால் வயல்களில் நீர் தேங்கி உள்ளது.
ஆகையால் நெல் நடவுப் பயிர் நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலங்களில், ஏக்கருக்கு ஒவ்வொரு விவசாயியும் 15,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். இது குறித்து இப்பகுதியில் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu