ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் புதிய சமையல் கூடம் திறப்பு

ஜெயங்கொண்டம்  அரசு பள்ளியில் புதிய சமையல் கூடம் திறப்பு
X

புதிய சமையல் கூட கட்டிடத்தை திறந்து வைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ  

வாரியங்காவல் பள்ளியில் ரூ. 4.52 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சமையல் கூட கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வாரியங்காவல் கிராம அரசு பள்ளியில், 4.52 லட்சம் மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்ட சமையல் கூட கட்டிடத்தை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார். இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா.தமிழரசு, ஜாகிர்உசேன், ஊராட்சி மன்ற தலைவர் வி.மணிசேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர்.அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி, உதவிப் பொறியாளர் ராஜா சிதம்பரம், தலைமை ஆசிரியை செந்தமிழ்செல்வி, சத்துணவு மேலாளர் ராதிகா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai marketing future