அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் புதிய  பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என ஏற்கனவே போக்குவரத்துத் துறை அமைச்சரடம் கோரிக்கை வைத்தார்கள். அதனடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் கழுமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புறநகர் பேருந்து சேவையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இப்பேருந்து தினமும் கழுமங்கலம் கிராமத்திலிருந்து மாலை நேரங்களில் தினசரி இரண்டு நடைகள் கூடுதலாக இயக்கப்படும். இப்பேருந்து கழுமங்கலத்திலிருந்து புறப்பட்டு உடையார்பாளையம் வழியாக ஜெயங்கொண்டத்தை சென்றடையும். இதனால் கழுமங்கலம் கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் நேரடியாக ஜெயங்கொண்டம் செல்வதற்கு கூடுதலாக புறநகர பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கழுமங்கலம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய ஊரக நலக்குழுமம் நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நலவாழ்வு மையத்தின் துணை சுகாதார நிலையக் கட்டிடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கழுமங்கலம் கிராமத்தில் கழுமங்கலம் முதல் பிலாக்குறிச்சி வரை ரூ.49.700 இலட்சம் மதிப்பீட்டில் 1.200 கி.மீ நீளத்திற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், பொது மேலாளர் சக்திவேல், கோட்ட மேலாளர்கள் ராமநாதன், சதீஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!