அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை

அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை
X
ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை என்று தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி விடுத்துள்ள செய்திகுறிப்பில், கூறியிருப்பதாவது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் தேவைப்படுகிறது.

கொரோனா பணியில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட சான்று மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவைப்படும் பணியிடங்கள் .

1. மருத்துவர்கள் - 11

2. செவிலியர்கள் - 31

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 18

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி