வருமுன் காப்போம் மருத்துவ முகாமை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கிவைப்பு

கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, தா.பழூர் ஒன்றியம், கோடாலிகருப்பூர் ஊராட்சியில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்பில், தமிழக முதல்வர் ஆணைப்படி, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் "வருமுன் காப்போம்" மருத்துவ முகாமினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்.தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் சுதா இளங்கோவன், ஒன்றிய குழு உறுப்பினர் மண்டோதரி ராமையன் மற்றும் மருத்துவர்கள் மாலதி கண்ணன், புகழேந்தி, சரன்யாதேவி, அகிலா, விஜயலட்சுமி, வசுமதி, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu