சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்

சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்
X

ஜெயங்கொண்டம் ஒன்றிய வட்டார அளவிலான சதுரங்க போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.


சதுரங்க போட்டியினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக 44-வது சதுரங்க ஒலிம்பியாட் -2022 போட்டியை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் ஒன்றிய வட்டார அளவிலான சதுரங்க போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். இறுதியாக உடற்கல்வி இயக்குனர் முனைவர் இரா.வேல்முருகன் நன்றி கூறினார். இப்போட்டியில் வட்டார அளவிலான 34 பள்ளிகளிலிருந்து 198 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சா.இராஜேந்திரன், உடையார்பாளையம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஆ.செல்வகுமார் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!