ஜெயங்கொண்டம்: தூர்வாரும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ
தூர்வாரும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ கண்ணன்.
ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம்(வடக்கு) ஒன்றிய பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கோவில் வாழ்க்கை ஊராட்சி, காலனி தெருவில்,ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, திருக்களப்பூர் ஊராட்சி,வடக்கு தெருவில் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரியாத்துக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 5.50 மதிப்பீட்டில் கழிவறை கட்டிடம் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா(வட்டார ஊராட்சி), அருளப்பன் (கிராம ஊராட்சி), ஒன்றிய பொறியாளர் திருமாவளவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேல்முருகன் (கோவில்வாழ்க்கை), புஷ்பா செல்வமணி (திருக்களப்பூர்), பாவாடைராயன்(பெரியாத்துக்குறிச்சி), ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் சிவஜோதி, உதயகுமார், ஊராட்சி செயலாளர்கள் பழனிவேல், ராமலிங்கம், கிளை செயலாளர்கள் திருஞானம், நெடுஞ்செழியன் மற்றும் கழகத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார். உடன் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம்( தெற்கு) ஒன்றியம்,குவாகம் ஊராட்சி, செங்குந்தர் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா(வட்டார ஊராட்சி), அருளப்பன்(கிராம ஊராட்சி), ஒன்றிய பொறியாளர் திருமாவளவன், ஒன்றிய கழக செயலாளர் க.தர்மதுரை, ஊராட்சி செயலாளர் கொளஞ்சி, கிளை செயலாளர்கள் மதிவாணன், இளவரசன், இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், காட்டாத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் தனசேகரன் மற்றும் கழகத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu