கொரோனா நிவாரணம் வழங்கும் பணி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000/- வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.

அரியலூர் மாவட்டம், உதயநத்தம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை முதல் தவணையாக ரூ.2000/- வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

, கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூ.2000/- குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

கொரோனா தொற்றிலிருந்து பொது மக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு 2 மீட்டர் இடை வெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண உதவித் தொகையை பெற்றுச் செல்ல வேண்டும்.

மேலும் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதிகளில் முககவசம் அணிந்து. சமூக இடைவெளியினை பின்பற்றி தங்களுக்குரிய கொரோனா நிவாரண நிதியினை பெற்று பயன் பெற வேண்டும இவ்வாறு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் பொதுமக்களிடம் பேசினார்,.

Tags

Next Story