ஜெயங்கொண்டம் மறு வாக்குப்பதிவு : வாக்களிக்க நாளை விடுமுறை
மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்கு சாவடி
ஜெயங்கொண்டம் மறு வாக்குப்பதிவு 16-வது வார்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்க நாளை தினம் (21.02.2022) விடுமுறை. இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி சாதாரணத் தேர்தல் 2022-ல் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான சுயேட்சை வேட்பாளருடைய சின்னமான மறைதிருக்கி (Spanner)-க்கு பதிலாக திருகு ஆணி (Screw nail) தவறுதலாக பதிந்துள்ளதால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவர்களின் ஆணையின்படி நாளை 21.02.2022 மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் (மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள்). வாக்குப்பதிவின்போது அழியாத மை இடது கை நடுவிரலின் மீது வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வாக்குப்பதிவில் தொடர்புடைய நகராட்சி வார்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், மேற்கண்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 16-வது வார்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்கும் வகையில் நாளை தினம் (21.02.2022) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu