ஆடு திருடி சென்றவர்களை மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பு
ஆடுகள் திருடிச் சென்ற கொளஞ்சிநாதன் (29) மற்றும் ரகுநாத் (23).
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மயிலான்டன் கோட்டை தெற்கு தெருவை சார்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (37) மற்றும் வெங்கடேசன் ( 35). இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் உள்ள உபயோகமற்ற பழைய கட்டிடத்தின் அருகே தங்களது ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.
வழக்கம்போல் ஆடுகளை அந்தப் பழைய கட்டிடத்தில் கட்டிவிட்டு பாலகிருஷ்ணன் வீட்டில் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. விடியற்காலை 4 மணியளவில் ஆடுகள் சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் தனது வீட்டிலிருந்து எழுந்து அருகில் ஆடுகள் கட்டி இருந்த இடத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இரண்டு நபர்கள் கட்டியிருந்த இரண்டு ஆடுகளை திருடி தங்களது இருசக்கர வாகனத்தில் தூக்கி வைத்துக்கொண்டு வேகமாக சென்றதை பார்த்த பாலகிருஷ்ணன், உடனே தனது நண்பரை கூட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று ரெட்டிபாளையம் அருகே ஆடுகளைத் திருடி சென்றவர்களை மடக்கிப்பிடித்தனர்.
பின்பு அவர்கள் குறித்து விசாரித்ததில் மயிலான்டன் கோட்டை கிராமம் கொளஞ்சிநாதன் (29) மற்றும் கோவிந்தபுரம் கிராமம் ரகுநாத் (23) என்பது தெரியவந்தது. பின்பு இருவரையும் விக்கிரமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சாமிதுரை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த இரண்டு ஆடுகள் மற்றும் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu