அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த  டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
X
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரசாத்
அரியலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கட்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் அக்காவை திருமணம் செய்த சுரேஷ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டாடாஏஸ்வாகன டிரைவர் பிரசாத் என்பவர் சிறுமியை திருமணம் செய்துகொண்டதாக கிடைத்த தகவலின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கை பதிவு செய்து பிரசாத் என்பவரை போக்சோ சட்டத்தில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதற்கு முன்பாகவே, சுரேஷ் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரனையில் தெரியவந்ததையடுத்து சிறுமியிடம் பெற்ற புகாரின் பேரில் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 17வயது சிறுமிமீது அக்கா கணவர் பாலியல் வன்முறை மற்றும் திருமணம் என்ற இரு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!