சாக்கடைக்குள் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

சாக்கடைக்குள் விழுந்த  பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
X

பசு மாட்டை மீட்கும் தீயணைப்பு துறையினர்.

சாக்கடைக்குள் விழுந்த பசுமாட்டை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.

ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் சாக்கடைக்குள் விழுந்த சினை பசுமாட்டை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 8வது குறுக்கு தெரு மெயின் ரோட்டில் குப்பைகள் கொட்டிக் கிடந்த பகுதியில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது மேய்ந்த மாடுகளில் கரடிகுளம் கிராமம் முத்து நகரை சேர்ந்த அன்பழகன் என்பவரின் ஒரு சினை பசுமாடு எதிர்பாராதவிதமாக சாக்கடைக்குள் விழுந்தது .

இடுப்பளவு சேறு நிறைந்த சாக்கடை குழியில் இருந்து மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து அவ்வழியாக வந்த பொதுமக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பசு மாட்டினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!