அரியலூர் அருகே மகனை கடப்பாரையால் அடித்து கொலை செய்த தந்தை, பரபரப்பு

அரியலூர் அருகே மகனை கடப்பாரையால் அடித்து கொலை செய்த தந்தை, பரபரப்பு
X
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில் குடிபோதையில் வம்புசெய்த மகனை, தந்தை கடப்பாரையால் தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அண்ணா நகர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். அவரது மகன் ராஜா(எ)சின்னராசு வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த நிலையில், கடந்த மூன்றாடுகளுக்கு முன்னர் திருமணம் ஆகியுள்ளது.

இதன்பிறகு ஊரிலேயே தங்கிவிட்ட சின்னராசு, தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த சின்னராசுவை, அவரது தந்தை ராஜேந்திரன் கண்டித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கடப்பாரையால் சின்னராசுவின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் மூளைசிதறி சம்பவ இடத்திலேயே சின்னராசு உயிரிழந்தார்.

அச்சமடைந்த ராஜேந்திரன் நிகழ்விடத்தில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு இறந்த சின்னராசுவின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தப்பி ஓடிய தந்தை ராஜேந்திரனை தேடிவருவதோடு கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story