தபால் வாக்கு படிவங்கள் கிடைக்க வில்லை திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

தபால் வாக்கு படிவங்கள் கிடைக்க வில்லை திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு
X
அரியலூர் திமுக வேட்பாளர் தபால் வாக்கு படிவங்கள் கிடைக்கவில்லை என்று மாட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணன் அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு மனு ஒன்று அளித்துள்ளார். அம்மனுவில், நடைபெற்று முடிந்த 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக நான் போட்டியிட்டேன். இந்நிலையில் தேர்தல் பணியாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவது வழக்கமான ஒன்று.

ஆனால் இந்த முறை அவ்வாறு பணியாற்றிய அரசு ஊழியர்களில் பலருக்கு அவர்கள் முறையாக விண்ணப்பித்தும் அவர்களுக்கான தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவங்கள் கிடைக்கப்பெறவில்லை அவ்வாறு கிடைக்கப்பெறாத அவர்களில் சிலர் என்னிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர் அவர்களது பெயர் விபரங்களையும் இந்த மனுவோடு இணைத்துள்ளேன் ஆகவே மேற்படி பிரச்சினையை நிவர்த்தி செய்து தபால் வாக்குகள் அனைத்து அரசு ஊழியர்களுக்கு உடனடியாக சென்று சேர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!