ஜெயங்கொண்ட த்தில் பேரிடர் மீட்பு பற்றி தீயணைப்பு துறையினர் ஒத்திகை

ஜெயங்கொண்ட த்தில்   பேரிடர் மீட்பு   பற்றி தீயணைப்பு துறையினர் ஒத்திகை
X

ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி  மாவட்ட வருவாய் அதிகாரி  ஜெயினுலாபுதீன் முன்னிலையில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டத்தில் பேரிடம் மீட்பு கால நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயினுலாபுதீன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மழை. வெள்ள காலங்களில் மழைநீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரப்பர் படகு மூலமாக மீட்பது.ஏரி குளங்களில் சிக்கிக் கொண்ட நீச்சல் தெரியாத நபர்களை பாதுகாப்புடன் மீட்பது.கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை நவீன இயந்திரங்கள் கொண்டு மீட்பது.இரண்டு கால்களில் அடிபட்டவர்கள் எப்படி காப்பது, பாம்புகளைப் பிடிப்பது உள்ளிட்டவைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறையினர் மூலம் செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.


மேலும் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்துவது, நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை ரப்பர் டியூப் மூலம் மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்டு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முதல் உதவி சிகிச்சை குறித்தும் தீயணைப்புத் துறையினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

.ஒத்திகை நிகழ்ச்சியில் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அமர்நாத், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட முதல் நிலை வேட்பாளர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!