அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஊரக வேலை திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வேலை திட்டத்தை சிதைக்காமல் வழங்கவும், காலை 7 மணிக்கு வேலைதளத்திற்கு வர சொல்லி கட்டாயபடுத்துவதை கைவிட வேண்டும்.

தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்படி 100 நாள் வேலை திட்டத்தில் 150 நாட்களாக வேலை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தினக்கூலி 381 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடரவும் வலியுறுத்தி ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர்வர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!