ஆண்டிமடத்தில் தமிழர் நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆண்டிமடத்தில் தமிழர் நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஆண்டிமடத்தில் தமிழர் நீதிக்கட்சி நிறுவனர் சுபா.இளவரசன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திட பின்புலமாக இருப்பவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் நீதிக் கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கத்தினர்.




தமிழர் நீதிக்கட்சி சுபாஇளவரசன் மீது தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பவர்களை கைது செய்ய ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது

தமிழர் நீதிக்கட்சி சுபா.இளவரசன் மீது தாக்குதல் நடத்திட பின்புலமாக இருப்பவர்களை கைது செய்ய ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா இளவரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது, துளாரங்குறிச்சி அருகே அவர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து இளவரசன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்மறவன், இளந்தமிழன் பத்மநாபன், கலை (எ) ரவிச்சந்திரன் உட்பட 4 பேரை உடையார்பாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழர் நீதிக் கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் இணைந்து தாக்குதலுக்கு பின்பலமாக உள்ளவர்களை உடனே கைது செய்ய கோரி ஆண்டிமடம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில பொருளாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாநில மகளிரணி தலைவி (வீரப்பன் மனைவி) முத்துலட்சுமி, தமிழர் நீதிக்கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் அமைப்பை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மகளிரணித் தலைவர் முதுலட்சுமி வீரப்பன் கலந்துகொண்டு கண்டன உரை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முத்துலட்சுமிவீரப்பன் பேசியதாவது: ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய நீதி கட்சி தலைவர் சுபாஇளவரசன் தற்போது மனம் திருந்தி ஜனநாயக முறையில் வாழ்ந்து வருகிறார். அவர் மீது தற்போது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டு பிடிக்க தனிப் பிரிவு காவல்துறை அமைத்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆயுத பாதையில் இருந்த சுபா இளவரசன் தற்பொழுது ஜனநாயக பாதையில் சென்று கொண்டிருக்கிறார் அவரை மீண்டும் ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள். தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது அதே போன்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் சிறப்பான முறையில் காவல்துறையும் செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.


Tags

Next Story