ஜெயங்கொண்டம்: இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் எடுத்து செல்லும் அவலம்

ஜெயங்கொண்டம்: இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் எடுத்து செல்லும் அவலம்
X

ஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை கிராம மக்கள்  இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை ஏரியில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் எடுத்துச் செல்லும் அவலநிலை உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வானதிரையன்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவனேசன் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட அரசனடி ஏரியின் உள்ளே இறங்கி இடுப்பளவு தண்ணீரில் மயான கொட்டகைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அரசனடி ஏரியில் தரைப்பாலம் அமைக்க பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர். சட்டமன்ற மனுக்கள் குழு தரைப்பாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரை வழங்கி உள்ளது. ஆனால் அரசனடி ஏரியில் தரைப்பாலம் பரிந்துரை கிடப்பில் உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அரசனடி ஏரி தற்போது பாதி கொள்ளளவை எட்டி உள்ளதாகவும், இனி வரும் மழைக் காலங்களில் ஏதேனும் இறப்புகள் நேரிட்டால் எங்களால் மயான கொட்டகைக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகிறார்கள்.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil