அரியலூர்: சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர்: சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
X

அரியலூர் மாவட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் வட்டம், அருள்மொழி கிராமத்தில் நீர்வளத்துறையின் சார்பில் எண் கிளை வாய்கால் பொன்னார் பிரதான வாய்காலில் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் இன்று துவக்கி வைத்தார்.

நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொன்னார் பிரதான வாய்காலின் 15.51 கி.மீ லிருந்து பிரிந்து அருள்மொழி கிராமத்தில் தொடங்கும் எண் - 1 கிளை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக நேற்று அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம் கிராமத்தில் நீர்வளத்துறையின் சார்பில் காடூர் அணைக்கட்டு வழங்கு வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிப்பதுடன், கரைகளின் மேல் போடப்படும் மண் மீண்டும் கீழே விழாத வண்ணம் கரைகளை பலப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், செயற்பொறியாளர் (நீ.வ.து) கீதா, உதவிசெயற்பொறியாளர் வி.சாந்தி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!