அரியலூர் பள்ளிகளில் அ என்ற எழுத்தை எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

அரியலூர் பள்ளிகளில் அ என்ற எழுத்தை எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
X
அரியலூர் மாவட்ட பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
அரியலூர் மாவட்ட பள்ளிகளில் ஏ என்ற எழுத்தை எழுதி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை தொடங்கினர்.

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்களிடம் உள்ளது.இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டு பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனை தொடர்ந்து விஜயதசமியான இன்று பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். அதனையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் தாங்களும் தங்களுடைய குழந்தைகளுக்கும் முககவசம் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர்.

அங்கு சரஸ்வதி தேவிக்கு பூஜைசெய்து நெல்மணிகளில் அ எழுதி தங்களது குழந்தைகளின் கல்வியை இன்று தொடங்கிவைத்தனர்.சில பள்ளிகளில் இன்று கல்வி தொடங்குவதை நினைவுகூறும் வகையில் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.வீடுகளில் விளையாடி வந்த குழந்தைகளுக்கு கல்விக்கூடத்தில் விளையாட்டு உபகரணங்களை காட்டி பள்ளிக்குவரும் சூழலை ஆசிரியர்கள் உருவாக்கினர்.

குழந்தைகளுக்கு பள்ளிஅனுமதி சான்றை வழங்கிய பள்ளி முதல்வர்கள், அரசு அறிவித்த பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்களை கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!