ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் சுவரை உடைத்து கொள்ளை

ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் சுவரை உடைத்து கொள்ளை
X
ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டில் உள்ள சுவரை உடைத்து கொள்ளை, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் ராமதாஸ் சொந்தமான பராசக்தி ஹார்டுவேர்ஸ் கடை இயங்கி வருகிறது. இந்த ஹார்டுவேர்ஸ் கடையில் பல லட்சம் மதிப்பிலான இரும்பு சாமான்கள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவு கடையின் பக்கவாட்டில் உள்ள சுவரை உடைத்து 1லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான விலையுயர்ந்த காப்பர் ஒயர்களை திருட்டி சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா