டாஸ்மார்க் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை

டாஸ்மார்க் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை
X

பைல் படம்.

மேலகோவிந்தபுத்தூர் அருகே 19 மதுபாட்டில்களை கைப்பற்றி தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மேல கோவிந்தபுத்தூர் பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே மது விற்பதாக செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அப்பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு டாஸ்மார்க் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்ய முயற்சி செய்தனர். அப்பொழுது மதுவை விற்பனை செய்து கொண்டு இருந்த அந்த நபர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி விட்டார். பின்பு அங்கு மது விற்பனை செய்துகொண்டு இருந்த இடத்தை சோதனை செய்தபோது அவ்விடத்தில் 19 மது பாட்டில்கள் இருந்ததை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!